பட்டம் விடச் சென்ற சிறுவன் மரத்திலிருந்து விழுந்து பரிதாபகரமாக உயிரிழப்பு

Published By: P. Saranya

11 Aug, 2026 | 05:23 PM
image

நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர், மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முற்பட்டபோது மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம், திறப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோடாமடுவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

தோடாமடுவ, திறப்பனை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று குறித்த சிறுவன் தனது நண்பர்கள் சிலருடன் தோடாமடுவ வயல்வெளிக்குச் சென்று பட்டம் விட்டுக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுப்பதற்காக மரத்தில் ஏறிய நிலையில், எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் அநுராதபுரம், திறப்பனை பொலிஸார் ஈடுபட்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த...

2026-09-13 16:36:42
news-image

அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா:...

2026-09-13 15:57:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய சாரணர் சேவையில்...

2026-09-13 15:27:16
news-image

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 1.5...

2026-09-13 15:41:36
news-image

பருத்தித்துறையில் மூன்று வீடுகள் கையளிப்பு!

2026-09-13 15:26:27
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில்...

2026-09-13 15:07:41
news-image

கந்தரோடை விகாரையை நேரில் சென்று பார்வையிட்டார்...

2026-09-13 15:01:07
news-image

அநுராதபுரம் சாலியபுர பகுதியில் இடம்பெற்ற வீதி...

2026-09-13 15:24:11
news-image

எல் நினோ தாக்கம்; ஈச்சம் குளம்...

2026-09-13 14:45:57
news-image

மாவடிப்பள்ளி ஆற்றில் கரையொதுங்கியது ஆணின் சடலம்

2026-09-13 15:23:56
news-image

மலையகத் தமிழர்களின் பிரச்சினையை தித்வா பேரிடருக்குள்...

2026-09-13 14:46:49
news-image

எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படையுங்கள்...

2026-09-13 14:22:00