(செ. சுபதர்ஷனி)
கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை பகுதியில் கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இக் குற்றச்செயலை குடு அஞ்சுவின் தரப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்படி குற்றச்செயலை பிரான்சில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான குடு அஞ்சுவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வர்த்தக நிலையமொன்றுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த நபரை இலக்குவைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்திருந்த இரு சந்தேகநபர்களில் ஒருவர், அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றிருந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய மொஹம்மட் அஸ்மீன் மொஹிதீன் எனும் நபரே உயிரிழந்தார். குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழுத் தலைவருமான கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய ஆதரவாளர் எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் கட்டிடப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளராவார். அண்மையில் இரத்மலானை பகுதியில் வைத்து குடு அஞ்சுவின் தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர், இனந்தெரியாத சந்தேகநபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த சம்பவத்துக்குப் பழிவாங்கும் நோக்குடனே குடு அஞ்சுவின் தரப்பினரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் தலைமையில், கொழும்பு மத்திய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மஹேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையின் கீழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM