முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் களஞ்சியகள் நிர்மாணம்

11 Aug, 2026 | 04:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் களஞ்சிய தாங்கிகள் மூன்றினை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11)  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியத்தைப் பயன்படுத்தி முத்துராஜவெல முனையத்தில் 15,000 கனமீற்றர் எரிபொருள் களஞ்சிய தாங்கிகள் 02 உம் மற்றும்  10,000 கனமீற்றர் எரிபொருள் களஞ்சிய தாங்கி ஒன்றையும் நிர்மாணிப்பதற்கு 2025.06.02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இக்கருத்திட்டத்தை அமுல்படுத்தும் போது சுற்றாடல், சட்ட ரீதியான மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பாக அந்தந்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சரிடம் கோரிக்கை சமர்;ப்பிப்பதற்கு 2026.07.20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் விதிக்கப்பட்டுள்ள விதப்புரைகள் மற்றும் நிபந்தனைகள் இப்பெறுகையின் ஒப்பந்த உடன்படிக்கையில் உட்சேர்;க்கப்பட்டுள்ளமையால், மற்றும் விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் அவர்களால் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமுறி முறைக்கமைய விலைமனுக்களைத் சமர்ப்பித்துள்ள விலைமனுதாரர்களில் உயர்மட்ட பெறுகைக் குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ள கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரான M/s Indo – East Engineering & Construction (Lanka) (Private) Limited and Ceylex Engineering (Private) Limited Joint Venture  இற்கு 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (பெறுமதி சேர் வரி இல்லாமல்) மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாய்கள் (பெறுமதி சேர் வரி இல்லாமல்) தொகைக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08