விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் 'ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு' படத்தின் அப்டேட்

11 Aug, 2026 | 04:19 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தில்  பொலிவுட் நடிகை தபு ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு ,துனியா விஜய் குமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜே பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூரி ஜெகன்னாத் - சார்மி கவுர் - ஜே. பி. நாராயன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.‌

இந்தப் படத்தின் டைட்டில் லுக் -ஃபர்ஸ்ட் லுக் -டீசர் -ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. தற்போது வித்தியாசமான காவல்துறை அதிகாரி கௌரி ஹெக்டே எனும் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை தபுவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த காணொளியில் அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பு விரிவாகவும்... நேர்த்தியாகவும்... அற்புதமான திரை மொழியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-10 15:55:39
news-image

நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட 'ஹைக்கூ'...

2026-09-10 17:13:50
news-image

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபாலி'...

2026-09-10 15:13:27
news-image

தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் 'சீன்'!

2026-09-10 14:34:57
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'கோல்டு கால்' திரைப்படத்தின்...

2026-09-09 15:44:52
news-image

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

2026-09-09 15:07:00
news-image

நடிகை சித்தி இத்னானி நடிக்கும் 'ட்ரோன்ஸ்'...

2026-09-09 14:58:29
news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39