போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு : முதல்வர் விஜய் தலைமையில் உறுதிமொழி!

11 Aug, 2026 | 04:32 PM
image

தமிழக முதல்வர் விஜய் தலைமையில், 'போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பெயரில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 'போதை மற்றும் புகையிலை இல்லாத வளாகம்' எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

அத்துடன் போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதமான கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முதல்வர் விஜய் தலைமையில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை சார்பில் 'போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' எனும் பெயரில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் - அரசின் சார்பில் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அழிக்கப்பட்டதன் காணொளியை பார்வையிட்டார்.

அத்துடன் போதை மற்றும் புகையிலை இல்லாத வளாகம்' தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

போதை பொருளை ஒழிப்பதில் சிறப்பாக கடமையாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.

போதை பொருள்களின் பாவனையை குறைத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட்ட பாடசாலை மற்றும் கல்லூரிகளில் மூன்று பிரத்யேக தன்னார்வலர்கள் குழுக்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வில் 37 மாவட்டங்களில் இருந்து 2000 மாணவர்கள் நேரில் வருகை தந்தனர். அத்துடன் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காணொளி வாயிலாக பங்கு பற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். '' என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜாவா கடலில் மாயமான இந்தோனேஷிய பயணிகள்...

2026-09-13 13:27:33
news-image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு...

2026-09-13 12:44:55
news-image

இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல்...

2026-09-13 11:02:52
news-image

லண்டன் கார் பந்தயத்தில் வரலாற்றுச் சந்திப்பு:...

2026-09-13 12:53:28
news-image

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்றார்...

2026-09-12 14:21:54
news-image

நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை...

2026-09-12 14:11:35
news-image

இலங்கைத் தமிழரான கம்சி குணரட்ணம் நோர்வே...

2026-09-12 12:26:55
news-image

இந்தோனேசியா ஜகார்த்தாவில் பூமியதிர்ச்சி - பொதுமக்களுக்கு...

2026-09-12 11:09:01
news-image

பிலிப்பைன்ஸில் படகு தீப்பற்றி எரிந்து விபத்து...

2026-09-12 10:36:07
news-image

பிரான்ஸில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து...

2026-09-12 09:32:10
news-image

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இந்திய...

2026-09-11 15:07:46
news-image

9/11 பேரழிவு : அமெரிக்காவை உலுக்கிப்...

2026-09-11 14:47:24