(இராஜதுரை ஹஷான்)
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள மொத்த நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,
2026.07.22 அன்று இடம்பெற்ற 34ஆவது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் அரசால் நெல் கொள்வனவுக்கு செயன்முறைக்கு வசதியளிப்பதை நோக்காகக் கொண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தானத்தின் மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு விதப்புரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த விதந்துரைகளின் அடிப்படையில் கீழ்க்குறிப்பிட்டவாறு படிமுறைகளை மேற்கொள்வதற்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.
இதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லின் மொத்தத் தொகையில் 30,000 மெற்றிக்தொன்களை கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தானத்தின் மூலம் அரிசியாக மாற்றுதல், 30,000 மெற்றிக்தொன் நெல் தொகையை அரிசியாக மாற்றி 05 கிலோகிராம், 10 கிலோகிராம், 25 கிலோகிராம் மற்றும் 50 கிலோகிராம் பொதிகளாக விநியோகிப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தால், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்களைப் பெற்றுக்கொள்ளல், 2025.12.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானத்துக்கமைய, நெல் சந்தைப்படுத்தல் சபை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச, தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனம் மற்றும் ஹெக்டயர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கூடியதாக நியமிக்கப்பட்டுள்ள விலை நிர்ணயக் குழுவால் நெல்லை அரிசியாக மாற்றுகின்ற விகிதம் மற்றும் அரிசிக்குப் பொருத்தமான விலையை நிர்ணயித்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM