தெங்கு காணிகளை புனரமைப்பதற்கு விரைவில் விசேட வேலைத்திட்டம்!

11 Aug, 2026 | 04:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தெங்குக் காணிகளைப் புனரமைக்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் நிலவுகின்ற தெங்குக் கேள்விக்கு சமமான வழங்கலுக்கும் மற்றும் தொடர்ந்து வரும் மாதங்களில் ஏற்படுமென அனுமானிக்கப்பட்டுள்ள 'எல்நினோ' நிலைமையிலிருந்து தெங்குச் செய்கையைப் பாதுகாப்பதற்காக தெங்குக் காணிகளின் விளைதிறனை அதிகரிப்பதற்கு பேண்தகு செய்கை முறைகளை மேம்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக சிறிய அளவிலான தெங்குக் காணி உரிமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், தெங்குக் காணிகள் புனரமைப்பு விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் 85,000 ஏக்கர்கள் தெங்குக் காணிகளை உள்ளடக்குவதற்கும், தொடர்ச்சியான 03 ஆண்டுகளுக்கு இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 05 ஏக்கர் அல்லது அதற்குக் குறைவான தெங்குக் காணி உரிமையாளர் சிறியளவிலான தெங்குச் செய்கையாளர்களுக்கு கீழ்க்காணும் பணிகளுக்கு செலவிடப்படும் தொகையில் உயர்ந்தபட்சம் 65மூ சதவீதத்தின் கீழ் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கு பெருந்தோட்ட மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-09-11 06:26:29
news-image

2027ல் கடுமையான வறட்சி ஏற்படலாம்: நீர்...

2026-09-10 15:23:36
news-image

இலங்கை தொடர்பான இரகசிய ஒப்பந்தங்களை வெளிப்படுத்த...

2026-09-10 15:24:01
news-image

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புனித நீரைத்...

2026-09-10 15:24:49
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு...

2026-09-10 19:39:05
news-image

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்...

2026-09-10 15:34:59
news-image

நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் அடைப்பதன் மூலம்...

2026-09-10 16:06:41
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதவி நிலை...

2026-09-10 16:07:16
news-image

பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு தேசிய...

2026-09-10 19:39:39
news-image

கையிருப்பு திரட்டல் மற்றும் முகாமைத்துவத்தை மறுபரிசீலனை...

2026-09-10 19:40:29
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை: சபாநாயகர் பதவி...

2026-09-10 16:08:19
news-image

கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின்...

2026-09-10 19:40:53