கடற்றொழில் ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு அனுகூல உத்தேச திட்ட சட்டத்தைத் திருத்தம் செய்ய அனுமதி!

11 Aug, 2026 | 04:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

1990 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க கடற்றொழில் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அனுகூல உத்தேச திட்ட சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

1990 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க கடற்றொழில் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அனுகூல உத்தேச திட்ட சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகள், சமகாலத் தேவைகள் மற்றும் கடற்றொழில் சமூகத்தவர்களுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

இச்சட்டத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பொருத்தமான திருத்தங்களை முன்மொழிவதற்காக அதிகாரிகள் குழுவொன்று மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் ஓய்வூதியத்திற்குப் பங்களிப்புச் செய்வதன் மூலம் கிடைக்கின்ற அனுகூலங்களை அதிகரிப்பதற்காகவும் மற்றும் கடற்றொழிலாளர்கள் வயோதிப நிலையை அடையும் போது சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கடற்றொழில் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அனுகூல உத்தேச திட்டத்தை திருத்தம் செய்வதற்காக இக்குழு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, குறித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க கடற்றொழில் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அனுகூல உத்தேச திட்டச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10