கெக்கிராவ பிரதேசத்தில் சமுதாய சீர்திருத்த நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அனுமதி 

11 Aug, 2026 | 03:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களத்துக்கான சீர்திருத்த நிலையத்தை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில்,

1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் சுற்றுலா நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் மூலம் சிறு தவறாளர்களுக்கு சமுதாயம்சார் சீர்திருத்தக் கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் அதிகமானவர்கள் போதைப்பொருள் அல்லது மதுசாரம் தொடர்பான தவறாளர்களாக இருப்பதுடன், அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து ஆரோக்கியமான பிரஜைகளாக சமூகமயப்படுத்துவதற்கு விசேட கவனத்தைச் செலுத்தி சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கட்டியெழுப்புவதற்கு சமுதாயம்சார் சீர்திருத்தச் செயன்முறைக்கு உட்படுத்தப்படுவர்.

ஆயினும், சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்திடம் அதிகமான போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டு தவறாளர்களாக இருக்கின்ற ஆட்களுக்கு வதிவிட சிகிச்சையை வழங்குவதற்குத் தேவையான பொருத்தமான போதியளவு விடுதி வசதிகள் இல்லை. 

அத்துடன், இத்திணைக்களத்துக்குச் சொந்தமான எவ்வித வதிவிட / வதிவிடமற்ற சீர்திருத்த நிலையங்களும் இல்லை.

அதனால், இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு, கெக்கிராவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 1.33 ஹெக்டெயர் நிலப்பரப்பில் நீதிமன்ற கட்டளைகள் மூலம் வழங்கப்படும் போதைப்பொருள் தொடர்பான தவறாளர்களுக்கு சீர்திருத்த நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கு 635 மில்லியன் மதிப்பீட்டுச் செலவின் கீழ் கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10