(இராஜதுரை ஹஷான்)
நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்த முடியாத நெருக்கடி நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. நீதிபதிகளின் பதவி காலத்தை மாத்திரம் அதிகரிப்பது அரச நிர்வாக கட்டமைப்பில் மிக மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை கைவிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சட்டத்தரணிகள் சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ள பின்னணியில் அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் தங்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வந்தார்கள். அதன் விளைவு நாட்டுக்கு எதிரானதாக அமைந்தது. மஹிந்த , கோட்டா வழியில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்க கூடாது.
நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தை பகிரங்கப்படுத்த முடியாத நெருக்கடி நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. நீதிபதிகளின் பதவி காலத்தை மாத்திரம் அதிகரிப்பது அரச நிர்வாக கட்டமைப்பில் மிக மோசமான நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் மற்றும் நீதித்துறை சட்டத் திருத்தம் தொடர்பான சட்டமூலம் குறித்து வெளிப்படையான எவ்வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது பயனற்றது.
22 ஆம் திருத்தம் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படும்.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் அரசாங்கம் தாராளமாக மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லலாம் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM