(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கத்துக்கு எதிரான மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தின் குறைபாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும், சிவில் அமைப்பினரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.இது முற்றிலும் தவறானது.
அரசாங்கத்துக்கு எதிரான மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாகவே கைதுகள் இடம்பெறுகின்றன.
அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஒருபோதும் அடிபணிய போவதில்லை.அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகம் மற்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்கு மாத்திரம் முன்னுரிமையளித்துள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM