(நெவில் அன்தனி)
அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்டில் நேற்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான், 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றது.
அயர்லாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியானது முன்னாள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை தகுதிகாண் சுற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து இலங்கை உட்பட 10 நாடுகள் 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டன.
இங்கிலாந்தில் 1975இல் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண அத்தியாயம் மற்றும் இரண்டாவது அத்தியாயம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் 2019இல் தகுதிகாண் சுற்றின் மூலமே உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.
ஆனால், இந்தியாவில் 2023இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் தகுதிபெறவில்லை. உலகக் கிண்ண வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் விளையாடத் தவறியது அதுவே முதல் தடவையாகும்.
இது இவ்வாறிருக்க செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களை வகித்த அணிகள் 2027 உலகக் கிண்ணத்தில் நேரடியாக விளையாடத் தகுதிபெற்றிருந்தன.
வரவேற்பு நாடுகளான தென் ஆபிரிக்காவும் ஸிம்பாப்வேயும் உலகக் கிண்ணத்தில் இயல்பாகவே நேரடி தகுதியைப் பெற்றிருந்தன.
தரவரிசையில் தென் ஆபிரிக்கா இடம்பெற்றதால் 9ஆம் இடத்தைப் பெற்ற பங்களாதேஷுக்கு நேரடி தகுதிபெறும் வாய்ப்பு கிடைத்தது.
நமிபியாவும் வரவேற்பு நாடுகளில் ஒன்றாக இருக்கின்றபோதிலும் அவ்வணி நேரடி தகுதியைப் பெறவில்லை.
தென் ஆபிரிக்கா மற்றும் ஸிம்பாப்வே ஆகிய அணிகளுடன் இந்தியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் 2027 உலகக் கிண்ணத்தில் நேரடியாக விளையாட தகுதிபெற்றுள்ளன.
மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியன 2027 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றுள்ளன. 2024 - 2026 கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் 2இல் ஓமான் 4ஆம் இடத்தில் இருக்கின்றபோதிலும் இன்னும் உலகக் கிண்ண தகுதிகாணில் விளையாடுவதை உறுதிசெய்துகொள்ளவில்லை.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM