ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியன்மார்

Published By: P. Saranya

11 Aug, 2026 | 11:55 AM
image

மியன்மார் இராணுவ அரசாங்கம் ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ஆசியான் கூட்டமைப்பின் தற்போதைய தலைமை நாடான பிலிப்பைன்ஸ், ஆங் சான் சூகியை நிபந்தனையின்றி முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவரையோ அல்லது பிற அரசியல் கைதிகளையோ சந்திப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு பதிலளித்த மியன்மார் வெளிவிவகார அமைச்சு, "மனிதநேய அடிப்படையில் அவரது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டிருந்தாலும், அவரை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்வது என்பது நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படும்" எனக் கூறி கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அத்துடன், மியன்மார் பிரச்சினையைச் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் சிறப்புத் தூதுவர் முறை இனி தங்களுக்குத் தேவையில்லை எனவும் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

81 வயதான ஆங் சான் சூகி, 2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அவரைச் சந்தித்துப் பேச அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் முதன்முறையாக பிரமாண்ட...

2026-09-14 18:03:38
news-image

தென்னாபிரிக்காவில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2026-09-14 17:32:32
news-image

“அன்பு சகோதரர் அஜித்துக்கு, பிரியமுடன் விஜய்”...

2026-09-14 13:56:20
news-image

“கவிழ்ந்த படகின் அடியில் இன்னும் என்...

2026-09-14 12:24:17
news-image

இந்தோனேஷிய பயணிகள் கப்பல் விபத்து: உயிரிழந்தோரின்...

2026-09-14 11:58:33
news-image

2027க்கான பிரிக்ஸ் தலைமையை ஏற்றது சீனா

2026-09-14 12:02:27
news-image

சிலியில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ...

2026-09-14 10:37:10
news-image

போரிஸ் ஜோன்சன் உட்பட ஐரோப்பிய அதிகாரிகள்...

2026-09-14 10:59:57
news-image

ஜாவா கடலில் மாயமான இந்தோனேஷிய பயணிகள்...

2026-09-13 13:27:33
news-image

இந்தியப் பிரதமர் மோடி அளித்த இரவு...

2026-09-13 12:44:55
news-image

இந்தோனேஷியாவில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல்...

2026-09-13 11:02:52
news-image

லண்டன் கார் பந்தயத்தில் வரலாற்றுச் சந்திப்பு:...

2026-09-13 12:53:28