சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரியா சர்மா அறிமுகமாகிறாராம்.

இவர் கௌதம் வாசுதேவ் இயக்கிய ‘நீதானே என் பொன் வசந்தம்‘ என்ற படத்தில் நாயகி சமந்தாவின் சகோதரியாக நடித்தவர். இவர் தற்போது தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகி வெற்றிப் பெற்றிருக்கிறார். இவரை நாயகியாக அறிமுகப்படுத்துவதா? அல்லது வேறு யாரையாவது அறிமுகப்படுத்தலாமா.? என இயக்குநர் பாலாவிடம் ஆலோசனை கேட்டு வருகிறாராம் விக்ரம்.

தகவல் : சென்னை அலுவலகம்