திரைப் பிரபலங்களிடம் ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக எல்லை மீறும் சம்பவங்கள் அவ்வப்போது இடம்பெறுகின்றன.
அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பொலிவுட் நடிகை நிகிதா ராவலுக்கு நேர்ந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நிகிதா ராவல், சிவப்பு கம்பள வரவேற்பின்போது புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பெண் ரசிகை ஒருவர் நடிகையை அணுகி அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். செல்ஃபி எடுத்த பின்னர், எதிர்பாராத விதமாக நிகிதா ராவலின் கன்னத்தில் அந்த ரசிகை முத்தமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த ரசிகை நடிகையை தன் பக்கம் இழுத்து அவரது உதட்டிலும் முத்தமிட முயன்றதாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த நடவடிக்கையால் நிகிதா ராவல் அதிர்ச்சியடைந்ததுடன், சங்கடத்திலும் ஆழ்ந்தார்.
நடிகை அந்த ரசிகையைத் தடுக்க முயன்ற போதிலும், அவர் தொடர்ந்து நடிகையைப் பிடித்துக்கொண்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்தவர்கள் தலையிட்டு அந்த ரசிகையை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
பொது நிகழ்வுகளில் பிரபலங்களை சந்திக்கும் போது அவர்களின் தனிப்பட்ட எல்லைகள் மற்றும் சம்மதத்தை மதிக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தும்போது வரம்புகளை மீறக்கூடாது என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தி திரையுலகில் நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் அறியப்படும் நிகிதா ராவல், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM