2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த 10 சர்வதேச விமான நிலையங்கள் !

11 Aug, 2026 | 10:05 AM
image

விமானப் பயணிகளின் கருத்துக்கணிப்பு மற்றும் சேவைகளின் தரத்தின் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த 10 சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலை ‘ஸ்கைடிராக்ஸ்’  அமைப்பு வெளியிட்டுள்ளது.   

இப்பட்டியலில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளதுடன், ஆசிய நாடுகளைச் சேர்ந்த விமான நிலையங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

2026-ஆம் ஆண்டின் சிறந்த 10 விமான நிலையங்கள் 

சாங்கி விமான நிலையம் - சிங்கப்பூர் (Singapore Changi Airport - SIN)

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகின் மிகச்சிறந்த விமான நிலையத்திற்கான விருதை மீண்டும் வென்று முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

பிரமிக்க வைக்கும் உள்நாட்டு நீர்வீழ்ச்சி , பூங்காக்கள் மற்றும் சிறந்த உணவக வசதிகளுக்காக இது சர்வதேச அளவில் முதன்மையாகத் திகழ்கிறது.

இன்சியான் சர்வதேச விமான நிலையம் - தென் கொரியா (Incheon International Airport - ICN) 

கடந்த ஆண்டை விட முன்னேறி 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. பனிச்சறுக்கு அரங்கம், திரையரங்கம், உட்புறப் பூங்காக்கள் மற்றும் அதிவேகச் சோதனைகள் போன்ற சிறப்பம்சங்கள் மூலம் பயணிகளுக்குப் புதிய அனுபவத்தை அளிக்கிறது.

டோக்கியோ ஹனேடா விமான நிலையம் - ஜப்பான் (Tokyo Haneda Airport - HND) 

ஜப்பானின் மிக பிஸியான இந்த விமான நிலையம் உலகளவில் 3-வது இடத்தை வகிக்கிறது. மேலும், உலகின் "மிகவும் சுத்தமான விமான நிலையம்" என்ற விருதையும் இது வென்றுள்ளது.

ஹாங்காங் சர்வதேச விமான நிலையம்  -  சீனா (Hong Kong International Airport - HKIA) 

தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் விரைவான பாதுகாப்பு சோதனைகள்  மூலம் தரவரிசையில் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

டோக்கியோ நரிதா சர்வதேச விமான நிலையம் -  ஜப்பான் ( Tokyo Narita Airport - NRT) 

பாரம்பரிய ஜப்பானிய கலைக் கூடங்கள், உணவகங்கள் மற்றும் ஓய்வு அறைகளுடன் தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறது.

பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையம் - பிரான்ஸ் (Paris Charles de Gaulle Airport - CDG) 

ஐரோப்பிய கண்டத்தின் மிகச்சிறந்த விமான நிலையமாகத் தேர்வாகியுள்ள இது, உலகளவில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ரோம் பியுமிசினோ விமான நிலையம்  - இத்தாலி (Rome Fiumicino Airport - FCO)

தென் ஐரோப்பிய பிராந்தியத்தின் சிறந்த சேவைகளுக்காக 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இஸ்தான்புல் விமான நிலையம் - துருக்கி (Istanbul Airport - IST)

கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டு 8-வது இடத்தை அடைந்துள்ளது.

முனிச் விமான நிலையம் - ஜேர்மனி (Munich Airport - MUC)

மத்திய ஐரோப்பாவின் முன்னணி விமான நிலையமாகத் திகழ்ந்து 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.

வான்கூவர் சர்வதேச விமான நிலையம் - கனடா (Vancouver International Airport - YVR)

வட அமெரிக்கக் கண்டத்திலிருந்து முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த ஒரே ஒரு விமான நிலையமாக 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் சிறந்த 10 விமான நிலையங்களில் 5 இடங்களை ஆசிய கண்டத்தைச் சேர்ந்த விமான நிலையங்களே கைப்பற்றியுள்ளன.

இந்தியாவின் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலகளவில் 28-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையமாகவும் தெரிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கியூபாவில் நடனமாடி இணையத்தைக் கலக்கும் 70...

2026-08-28 12:57:11
news-image

360 தொன் எடையுள்ள பிரம்மாண்டக் கோட்டையை...

2026-08-26 16:27:14
news-image

உசைன் போல்ட்டை மிஞ்சிய சீனாவின் மனித...

2026-08-24 11:24:33
news-image

தனது 117ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின்...

2026-08-24 12:20:32
news-image

2,000 ட்ரோன்கள்... ஒரு காதல் கதை!...

2026-08-22 15:48:35
news-image

ஐரோப்பாவில் மிக உயரமான மேரி மாதா...

2026-08-20 12:15:47
news-image

அழிவின் விளிம்பில் உள்ள கழுகுகளைப் பாதுகாக்கும்...

2026-08-14 09:55:23
news-image

விக்ரமுடன் இருந்த லார் கிப்பன் எங்கிருந்து...

2026-08-14 09:17:37
news-image

உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய...

2026-08-11 11:58:56
news-image

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த...

2026-08-11 10:05:57
news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01