(எம்.ஆர்.எம்.வசீம்)
நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்காக எமது தாய்நாட்டையும் இந்தத் தேசியத்தின் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கவோ, நாட்டை மீண்டும் ஒரு பீதிக்குள்ளாக்கவோ நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது, ஓய்வூதியம் என்பன அரசியலமைப்பின் நீதித்துறை சுயாதீனம் என்ற பிரிவின் கீழேயே குறிப்பிடப்பட்டுள்ளன.
நாட்டில் வேறு பல தொழில்களும் உள்ளன. அமைச்சர்களின் வயது, ஜனாதிபதியின் வயது, விசேட வைத்தியர்களின் வயது, பல்கலைக்கழக பேராசிரியர்களின் வயது, பட்டய பொறியியலாளர்கள், கணக்காளர்களின் வயது தீர்மானிக்கப்படுவது பற்றி அரசியலமைப்பில் எந்தப் பிரிவும் இல்லை. நீதித்துறைக்கு மாத்திரமே உள்ளது. நீதிமன்ற சுயாதீனத்திற்காகவே. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தனிநபர்களை இலக்கு வைத்து நீதிமன்ற நீதிபதிகளின் காலம், ஓய்வூதியம் அல்லது ஓய்வுபெறும் வயதைத் தீர்மானிக்க முற்பட்டால், அடுத்து வரும் அரசாங்கங்களும் அதையே செய்யும்.
வழக்குகள் தேங்கியிருந்தால் அது குறித்து 2017 ஆம் ஆண்டின் அஜித் மான்னப்பெரும அறிக்கை, 2023 ஆம் ஆண்டின் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கை என்பவற்றில் பரிந்துரைகள் உள்ளன, அவற்றைச் நடைமுறைப்படுத்துங்கள்.
நீதிவான் நீதிமன்றங்களுக்கு அதிக வழக்குகள் வருவதைத் தடுப்பதற்கு நிர்வாக ரீதியான வேலைத்திட்டத்தை முதலில் முன்னெடுங்கள். பிணைச் சட்டத்தில் பிரச்சினைகள் இருந்தால் அச்சட்டத்தை மாற்றி பிணை வழங்கும் பணிகளைச் செய்யுங்கள்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை பொலிஸாரின் தேவைக்காக சிறைகளில் அடைப்பதற்குப் பதிலாக புனர்வாழ்வு அளிக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குங்கள்.
நீதிமன்ற சேவைக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மேலதிக நீதிபதிகள் தேவை எனின் கீழ் நீதிமன்றங்களிலிருந்து அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அரசாங்கத்தின் நோக்கம் என்ன? அரசாங்கத்தின் நோக்கம் மிகவும் தெளிவானது, இனி திசைகாட்டி என்ற பெயரில் அரசியல் இயக்கம் எதுவும் இல்லை. லால் விஜேநாயக்க வெளியே வந்து தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் பின்னர், இந்த அரசாங்கத்தின் பலமிக்க அமைச்சர் ஒருவர் கூறியது போல், தேசிய மக்கள் சக்தியில் தீர்மானமெடுக்கும் ஜனநாயக இடம் எதுவும் இல்லை.
1994 ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பார் என்ற வாக்குறுதியின் பேரிலேயே நிஹால் கலப்பத்தி போட்டியிடுவதில் இருந்து விலகினார். அவர்களின் 48 ஆண்டுகால கோரிக்கையையே ஜே.வி.பி கடந்த தேர்தலில் வாக்குறுதியாகக் கொண்டு வந்தது. அதை பாராளுமன்றத்தில் முறைப்படி செய்வதாயின், அதற்கு ஒரு வரலாறும் பொறுப்பும் மக்கள் ஆணையும் உள்ளது. அதை விட்டுவிட்டு இப்போது என்ன செய்கிறார்கள்? பிணையில் இருப்பவர்கள், வழக்கு உள்ளவர்கள், சிறையிலிருப்பவர்களே பயந்து நீதிபதிகளின் வயதெல்லையை நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என அரசாங்கம் கூறுகிறது.
ஒன்றைக் கூற விரும்புகிறேன், அப்படிப் பயந்தவர்கள் எதிர்க்கட்சியிலும் இருக்கலாம். அப்படிப் பயந்திருந்தால் நாம் அரசியல் செய்யமாட்டோம். ஆனால் உண்மையிலேயே பயந்த சிலர் இந்த அரசாங்கத்தில்தான் இருக்கிறார்கள்.
அரசாங்கத்திற்கு நாம் ஒன்றை கூறுகிறோம்: நீங்கள் உண்மையானவர்கள் என்றால், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோது என்ன நடந்தது என்பதைப் பாருங்கள், அது பற்றிய முழு அறிக்கை கோப் குழுவில் உள்ளது. நாட்டின் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு யார் பொறுப்பு எனப் பார்த்து தண்டனை வழங்குங்கள். நிதி அமைச்சு, திறைசேரி, மத்திய வங்கியில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. 2022 மார்ச் 07 இல் சர்வதே நாணய நிதியம் எச்சரித்தும் மத்திய வங்கி அதிகாரிகள் நாட்டை வங்குராேத்தாக்கினர், முடிந்தால் நடவடிக்கை எடுங்கள். உர நெருக்கடி, மின்வெட்டு என்பவற்றுக்கு முடிந்தால் நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து வெசாக் வாழ்த்து அட்டை அடித்தார்கள், வெள்ள நிவாரணம் கொடுத்தார்கள், போஸ்டர் ஒட்டினார்கள் என்று கைது செய்கிறார்கள். இது திருடர்களைப் பிடிக்கும் வழியல்ல.
பிடிக்க வேண்டிய பெரிய திருடர்கள் ஜனாதிபதி செயலகத்திலேயே இருக்கிறார்கள். இன்று மக்கள் வாக்களிக்காத ஒரு 'சிவப்பு ஜுண்டா' பெலவத்தையிலிருந்து நாட்டை ஆள்கிறது. இதற்கு நாம் எவ்வகையிலும் பயப்படப்போவதில்லை.
எனவே மறைமுக கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்காக எமது தாய்நாட்டையும் இந்தத் தேசியத்தின் எதிர்காலத்தையும் காட்டிக்கொடுக்கவோ, நாட்டை மீண்டும் ஒரு பீதிக்குள்ளாக்கவோ நாம் இடமளிக்கப்போவதில்லை என்பதை மட்டும் அரசாங்கத்திற்கு நினைவூட்டுகிறோம் என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM