அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் மிக முக்கியமானதுமான போட்டி இன்று மெல்பேர்ணில் இடம்பெற்றது.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில்  துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில்  7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.