பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம், கடைசி நேர சிவப்பு  அட்டை காரணமாக பயிற்றுநரையும் இழந்தது

Published By: Vishnu

10 Aug, 2026 | 11:29 PM
image

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தக்கும் சீ ஹோக்ஸ் கழகத்துக்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில்  திங்கட்கிழமை மாலை நடைபெற்ற நான்காம் வார சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் கோல் போடவில்லை.

புளூ ஸ்டார் கழகம் ஒரு பெனல்டி உட்பட மேலும் சில கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டது.

மறுபுறத்தில் சீ ஹோக்ஸ் அணியும் பல கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.

போதாக்குறைக்கு புளூ ஸ்டார் கழகத்தின் தலைமைப் பயிற்றுநர் உதவி மத்தியஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கள மத்தியஸ்தரினால் 2 மஞ்சள் அட்டைகளுடன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

எதிர்பார்த்ததைவிட ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய இப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் புளூ ஸ்டார் கழக வீரர் மொஹமத் ஷபானை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து சீ ஹோக்ஸ் அணித் தலைவர் மனரம் பெரேரா விதிகளுக்கு முரணான வகையில் வீழ்த்தியதால் புளூ ஸ்டார் கழகத்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது.

ஆனால் அந்தப் பெனல்டியை புளூ ஸ்டார் அணித் தலைவர் ஜெறி ஒம்பேப் தவறவிட்டார். அவரது  9ஆவது நிமிட  பெனல்டி உதை கோல் குறுக்குக் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால், இரண்டு அணிகளினதும் முயற்சிகள் தவறிப் போயின அல்லது கோல்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணியினரும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய போதிலும் கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இறுதியில் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-06 20:36:50
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம்...

2026-09-04 20:46:15
news-image

றினோன் - புளூ ஈக்ள்ஸ் அணிகள்...

2026-09-04 13:44:57
news-image

AFC 20இன் கீழ் ஆசிய கிண்ண...

2026-09-04 12:12:27
news-image

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச்...

2026-09-03 14:15:10
news-image

ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் 2027க்கான...

2026-09-02 22:49:03
news-image

பிரதான கழகங்கள் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்:...

2026-09-02 18:28:56
news-image

வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கு முதலாவது...

2026-09-01 18:55:51
news-image

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் -...

2026-09-01 13:30:20