(க.சிவலிங்கமூர்த்தி)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்படுவார் என்பதை தாம் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சாகர காரியவசம் கைது செய்யப்பட்டது தொடர்பாக திங்கட்கிழமை (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார் பொதுமக்களுக்கும் அரசுக்கும் சேவை செய்யாமல், அரசாங்கத்துக்கு மட்டுமே தொடர்ந்து சேவை செய்தால், பொலிஸாரை பொதுமக்கள் தாக்கும் அபாயம் அல்லது அத்தகைய தாக்குதலில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்தமை தொடர்பாகவே சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டனைச் சட்டக்கோவையின் 113,186 மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான அம்சம் யாதெனில், தண்டனைச் சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவானது அரசருக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதைப் பற்றியே குறிப்பிடுகிறது.
இதன் மூலம் இந்நாட்டிற்கு அரசர் ஒருவர் தோன்றி உள்ளார் என்பதை இந்த கைதின் வழி நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அரசருக்கு ஜெயம் உண்டாகட்டும் என வாழ்த்துவதா இல்லையா என்று நான் இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது வீட்டில் அழ வேண்டாம் என்று கூறத் தொடங்கியுள்ளனர், அதனால் யாரும் அழப்போவதில்லை.
சாகர காரியவசம் இங்கு இருந்து செல்வதற்கு முன்பே அவர் கைது செய்யப்படுவார் என்பதை நாம் அறிந்திருந்தோம். இதன்போது பொலிஸார் சாகர காரியவசமிடம் அவரது தொலைபேசி எங்கே என்று வினவினர்.
அதற்கு அவர், தான் கைது செய்யப்படப்போவது தெரியும் என்பதால் தொலைபேசியை எடுத்துவரவில்லை என்று பதிலளித்தார்.
இவ்வாறு தான் கைது செய்யப்படப்போவதை அறிந்தே அவர் வந்திருந்தார், இருப்பினும் அவரது மனதில் எவ்வித சலனமோ அல்லது பயமோ காணப்படவில்லை. 323 கொள்கலன் மோசடி, 2.5 மில்லியன் டொலர் மோசடி அல்லது நிலக்கரி மோசடி ஆகியவற்றுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், எனது சொத்துக்கள் திடீரென அதிகரிக்கவில்லை என்றும் அவர் மிகவும் தெளிவாகக் கூறினார். எனவேதான் பெருமையுடன் பொலிஸ் நிலையத்துக்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டுச் சென்றார் என தெரிவித்தார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM