தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான துஷ்யந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஆல்பாசு ஆல்பாசு..' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆல் பாஸ்' திரைப்படத்தில் துஷ்யந்த், ஜனனி குணசீலன்,ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணியம் சிவா, ஆர். மோகனா , பிரசன்னா பாலச்சந்திரன், வினோதினி வைத்தியநாதன், சரத் லோகித்ஸவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தில் ராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கிறார்.
பாடசாலையில் பயிலும் மாணவர்களின் வாழ்வியலை பொழுது போக்கு அம்சங்களுடன் விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகனா தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஹேய் அகலு டகுலு கெளப்பு விசிலு..' என தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, பின்னணி பாடகர் கானா சிவா மற்றும் பின்னணி பாடகி முகில் மயூரி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். மாணவர்களின் பாடசாலை மற்றும் கல்லூரி வாழ்வியலை உற்சாகத்துடன் விவரிக்கும் பாடலாக இருப்பதாலும் .. இவை துள்ளல் இசை பாணியில் அமைந்திருப்பதாலும்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM