ரசிகர்களுக்கு இரட்டை விருந்து வழங்கும் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா!

Published By: Digital Desk 2

10 Aug, 2026 | 04:51 PM
image

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியராக பல வெற்றி பெற்ற பாடலை எழுதிய விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'ஹாய்'. இதில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசைமமைத்திருக்கிறார். 

ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்   தி ரவுடி பிக்சர்ஸ் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்... எதிர்வரும் 14 ஆம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ் திரையுலக வணிகர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு, 14-ஆம் திகதி சூர்யா நடித்த 'விஸ்வநாத் & சன்ஸ்' - விஷால் நடித்த 'மகுடம் 'ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதால் இந்த 'ஹாய்' திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே நயன்தாரா நடிப்பில் உருவான 'டாக்ஸிக் ' திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என்பதும், இதனைத் தொடர்ந்து 28 ஆம் திகதி நயன்தாரா நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படம் வெளியாகிறது என்பதும், இது நயன்தாராவின் ரசிகர்களுக்கு அவர் வழங்கும் இரட்டை விருந்து என்றும் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2”...

2026-09-13 10:01:50
news-image

செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியீட்டை...

2026-09-12 15:42:25
news-image

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில்...

2026-09-12 15:41:43
news-image

நடிகை சுமன் ராவ் நடிக்கும் 'தெய்வா'...

2026-09-12 15:39:15
news-image

நடிகர் ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப்...

2026-09-12 15:36:15
news-image

நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'ஆகாயம்'...

2026-09-12 15:35:54
news-image

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும்...

2026-09-12 15:35:39
news-image

நடிகை முல்லையரசி நடிக்கும் 'பாவை' படத்தின்...

2026-09-12 15:33:58
news-image

‘வைகைப்புயல்’ வடிவேலுவுக்கு இன்று 67ஆவது பிறந்தநாள்!

2026-09-12 11:09:25
news-image

ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'இம்மார்ட்டல்'...

2026-09-11 17:47:00
news-image

ஒக்டோபரில் வெளியாகும் பொலிவுட் நடிகர் அஜய்...

2026-09-11 17:44:39
news-image

கிஷன் தாஸ் நடிக்கும் 'சி யூ'...

2026-09-11 17:42:04