சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய இரண்டு விமானங்கள்  மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி சென்னை மற்றும் சிசேல் ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த விமானங்களே இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக  பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய சேவை நேர முகாமையாளர் தெரிவித்தார்