தமிழ் சினிமாவின் தரமான படைப்புகளை வழங்கி முத்திரை பதித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 99 ஆவது திரைப்படமான 'மகுடம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகும் 45 வது இயக்குநர் நான் என 'மகுடம்' திரைப்படத்தின் நாயகனும், இயக்குநருமான விஷால் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விஷால் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'மகுடம்'. இதில் விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், பதம் குமார், சபு மோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. சுரேஷ் - ஆர். பி. ஜீவன் சவுத்ரி- 'ஜித்தன்' ரமேஷ் - ஜீவா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர். படத்தைப் பற்றி அறிமுக இயக்குநரும் , நடிகருமான விஷால் பேசுகையில், '' சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர். பி. சவுத்ரி - திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் எமக்கு இந்த வாய்ப்பை வழங்கினர்.
இவர்களுக்கு நன்றி. உதவியாளராக பணியாற்ற வாய்ப்பளித்த 'ஆக்சன் கிங்' அர்ஜுன் சாருக்கும், நடிகர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்த இயக்குநர் பாலாவிற்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.
ராம் கோபால் வர்மாவின் 'உதயம்' படம் பார்த்துவிட்டு இயக்குநராக வேண்டும் என கனவு காண ஆரம்பித்தேன். அந்தக் கனவு இன்று நனவாகி இருக்கிறது. எம்முடைய கனவுகளின் மீது நாம் நம்பிக்கையுடன் இருந்தால்... நிச்சயமாக ஒரு நாள் அது நிறைவேறும்.
அது எமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும்.'மகுடம்' திரைப்படத்தின் கடைசி எட்டு நிமிட காட்சிகள் பார்வையாளர்களுக்கு மேஜிக் செய்யும். இப்படத்தின் உச்சகட்ட காட்சி இதற்கு முன் எந்த திரைப்படத்திலும் இடம்பெறாதது என உறுதியாக நம்புகிறேன். இப்படத்தின் வெற்றி விழாவில் பல விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்'' என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM