உளவு துறை பின்னணியில் புலனாய்வு திரைப்படமாக உருவாகும் 'ஓபரேஷன் டிரால் '

Published By: Digital Desk 2

10 Aug, 2026 | 04:26 PM
image

பான் இந்திய நட்சத்திரமான மலையாள நடிகர் ஜெயசூர்யா முதன்மையான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஓபரேஷன் டிரால்' திரைப்படக் குழுவினருடன் நட்சத்திர நடிகரான முரளி சர்மா இணைந்திருப்பதாக படக் குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் ரதீஷ் வேகா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஓபரேஷன் டிரால்' திரைப்படத்தில் ஜெயசூர்யா, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய்குமார், சிராஜுதீன், முரளி சார்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.

நஜோஸ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரதீஷ் வேகா இசையமைக்கிறார். உளவுத்துறை நடவடிக்கைகளின் பின்னணியில் குற்ற புலனாய்வு விசாரணையுடன் கூடிய தேச பக்தி படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்வில் என்டர்டெய்ன்மெண்ட்ஸ்  நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜாபி ஜார்ஜ் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் விவரிக்கையில், '' இந்தியாவின் வட பகுதியான ஜம்மு காஷ்மீரில் உள்ள டிரால் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் உளவுத்துறை நடவடிக்கைகளும்..  தேசப்பற்றும்... எக்சன் காட்சிகளுடன் இடம் பிடித்துள்ளது'' என்றார்.

மேலும், இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக தயாராகிறது.  இப்படக் குழுவினருடன் நடிகர் முரளி சர்மா இணைந்திருப்பதை அவருடைய பிறந்த நாளன்று  படக் குழு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25