டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

10 Aug, 2026 | 03:50 PM
image

எம்மில் சிலருக்கு வாழ்க்கைத் துணை, நெருங்கிய உறவு, நட்பு, செல்லப்பிராணி ஆகியவற்றால் திடீரென ஏற்படும் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள இயலாமல் இதய பாதிப்பு ஏற்படலாம். 

இதனை வைத்தியர்கள் ப்ரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் என்றும்  டகோட்சுபோ கார்டியோமயோபதி எனவும் குறிப்பிடுகிறார்கள். 

இதற்கு நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

குருதி அழுத்தத்தில் சம சீரற்ற நிலை, கடுமையான வலி, ஓஸ்துமா, விபத்து,  நிதி இழப்பு, அதீத பயம், உடலில் நாட்பட்ட தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை குறித்த செய்தியை பெறுதல், குடும்ப வன்முறை, புதிரான மருத்துவ செயல்முறை பரிசோதனை என எதிர்பாராத காரணங்களால் எம்முடைய மன அழுத்தம் அதிகரிக்கும் போது இதய செயலிழப்பு நிகழ்கிறது. 

இதயத்தசையில் உள்ள செல்கள் அல்லது இதயத்தில் ரத்த நாளங்களில் உள்ள செல்கள் அட்ரினலின் ஹோர்மோன் சுரப்புகளின் சமச்சீரற்ற நிலையின் காரணமாக இத்தகைய செல்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

 இதனால் இதயத்தின் இயல்பான செயல்பாட்டில் தடை ஏற்பட்டு, பாதிப்பு உண்டாகிறது. 

மாரடைப்பிற்கு உண்டான அறிகுறிகள் இத்தகைய பாதிப்பிலும் ஏற்பட்டாலும், இதனை எலக்ட்ரோ கார்டியோ கிராம் பரிசோதனை மூலம் கண்டறியலாம். 

சிலருக்கு எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனையும் அவசியப்படலாம். இதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது என்றும், அதிலும் குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடத்தில் காணப்படுவதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பை கண்டறிந்த உடன் வைத்தியர்கள் பிரத்யேக நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி முழுமையான நிவாரணத்தை தருகிறார்கள்.

வைத்தியர் குரு பிரகாஷ்

 தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50
news-image

பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில்...

2026-08-26 16:35:50