எதிர்வரும் புதன்கிழமை (12) ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் அறிவித்துள்ளது.
அன்று காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை பக்தர்கள் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும்.
தற்போது கடல் அலை சீற்றமாக இருப்பதனாலும், மண்ணரிப்பு காரணமாகப் பிதிர் கடன் செய்யும் பகுதி குறுகலாகக் காணப்படுவதனாலும், வருகை தரும் பக்தர்கள் தங்களது பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு அவதானத்துடன் தீர்த்தமாடிச் செல்லுமாறு மன்றத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த சங்கமப் பகுதி அதி பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்திருப்பதால், பாதுகாப்பு அமைச்சு, கடற்படை மற்றும் பொலிஸாரின் அனுமதி பெறப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கொழும்பு மாநகர சபையின் உதவியுடன் சுற்றாடல் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான உடை மாற்றும் கூடாரங்கள், ஆம்புலன்ஸ் அவசர உதவிச் சேவைகள் மற்றும் ஒலிபெருக்கிக் கட்டமைப்பு என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு கடற்படையின் சுழியோடிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடற்படை சுழியோடிகளின் அனுமதி கிடைத்த பின்னரே பக்தர்கள் தீர்த்தக் கரைக்கு அனுமதிக்கப்படுவர் என்பதால், அனைத்துப் பக்தர்களும் அமைதியான முறையில் ஒத்துழைப்பு வழங்கித் தீர்த்தமாடிச் செல்லுமாறு கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM