பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான எளிய வழிமுறை

Published By: Digital Desk 2

10 Aug, 2026 | 03:33 PM
image

எம்முடைய பிள்ளைகளுக்கு உரிய வயதை எட்டிய பிறகு, அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த தருணத்தில் தான் அவர்களுடைய ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து, மாங்கல்ய  பிராப்தம் வந்துவிட்டதா?  எப்போது வரும்? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என விரிவாகவும், தெளிவாகவும் ஆலோசனை கேட்பர். 

இத்தகைய தருணங்களில் ஜோதிட நிபுணர்களும் விரிவாக ஜாதகத்தை ஆராய்ந்து மாங்கல்ய பிராப்தம் எப்போது இருக்கிறது என்பதையும், எப்போது திருமணத்திற்கான முயற்சியை தொடங்கினால் வெற்றிகரமாக அமையும் என்பதையும் சொல்வர். 

சிலருக்கு சில பரிகாரங்களை ஜோதிட நிபுணர்களும், ஆன்மீக முன்னோர்களும் முன்மொழிவார்கள். 

இதற்கான காரணத்தை விவரிக்க மாட்டார்கள். ஏனெனில் அது தோஷமாக இருக்கக்கூடும். அதிலும் குறிப்பாக பெண் வழியிலான தோஷமாக இருக்கக்கூடும். இதனை நாம் எப்படி உணர்ந்து கொள்ள வேண்டும் 

என்பதன்  சூட்சமத்தை ஆன்மீக முன்னோர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஒருவரது ஜாதகத்தில் சூரிய பகவானின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் கிரகம் இருந்தால் பெண் வழியில் தோஷமும், சாபமும் இருக்கிறது என உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கு கிருத்திகை நட்சத்திரமும் , தேய்பிறை அஷ்டமியும் இணைந்து வரும் நாளில் வெள்ளை வண்ண பூக்களாலான மாலையை அருகிலுள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் சாற்றி வழிபட வேண்டும். அத்துடன் திருமணமாக உள்ள பெண்களுக்கு கண்ணாடி வளையல்களை பரிசாகவும் , தானமாகவும் வழங்குங்கள். 

மேலும் கல்வி கற்கும் திருமணம் ஆகாத பெண்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் தொடர்ந்து உதவிடுங்கள். இதனை தொடர்ந்து செய்யும் போது உங்களுக்கான  பெண் தோஷம் நிவர்த்தி அடைந்து, விரும்பிய வகையில் வரன் கிடைத்து, திருமணம் முயற்சி கைக்கூடி, நல்லதொரு இல்லற வாழ்க்கையை தொடங்கலாம்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21