நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு பாதகமானது ; அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது ; எதிர்க்கட்சிகள்தான் அதைக் கண்டு மகிழவேண்டும் - சுனில் ஹந்துனெத்தி 

10 Aug, 2026 | 02:02 PM
image

(செ.கவிஷனா)

நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானம், நாட்டின் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது நாட்டுக்கு பாதகமானது அல்லது அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது என்றால், எதிர்க்கட்சிகள் தான் அதைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸ பிரதேச சபையில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏனெனில், ஒரு அரசாங்கம் வலுவிழப்பது எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக சாதகமான சூழலையே உருவாக்கும். அவ்வாறு இருக்கையில், எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தை மையப்படுத்தி இவ்வளவு தீவிரமாக எதிர்ப்புத் தெரிவிப்பதும், பதற்றமடைவதும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள், நாட்டின் கடந்த கால தவறுகளையும் ஊழல்களையும் சட்டத்தின் முன் கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பிணைமுறி மோசடி போன்ற பல முக்கிய விடயங்களில் சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் தங்களுக்கு உள்ளதாக அரசாங்கம் வலியுறுத்துகிறது. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் ஜனநாயகத்தின் மீதான அக்கறை காரணமாக அல்ல, மாறாக சட்டம் முறையாகச் செயற்படுத்தப்பட்டால், தாங்கள் சட்டத்தின் பிடியில் சிக்கி சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பயத்தினாலேயே இத்தகைய குரல்களை எழுப்புகிறார்கள்.

இறுதியாக, தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் பொறுப்பேற்க அரசாங்கம் தயாராக இருப்பதுடன், அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் நாட்டுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளிடம் இல்லை. மாறாக, எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி விளைவுகளை அனுபவிக்கும் மக்களே அந்த முடிவுகளின் தன்மையைத் தீர்மானிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. கடந்த கால அநீதிகளுக்குத் தீர்வு காண்பதுடன், எதிர்காலத்தில் நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு இந்தச் சட்டத் திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10