புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ் அணிகள் மோதும் சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி இன்று

10 Aug, 2026 | 12:43 PM
image

(நெவில் அன்தனி)

நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்துக்கும் சீ ஹோக்ஸ் கழகத்துக்கும் இடையிலான சுப்பர் லீக் நான்காம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததசா விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தற்போது அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலுள்ள சீ ஹோக்ஸ் கழகம், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று 4ஆம் இடத்திற்கு முன்னேற கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

அதேவேளை, 3 புள்ளிகளுடன் 7ஆம் இடத்திலுள்ள புளூ ஸ்டார் கழகம் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் 2 இடங்கள் முன்னெறி 5ஆம் இடத்தைப் பெறும். 

இதனைக் கருத்தில் கொண்டு இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் புளூ ஸ்டார் கழகம் களம் இறங்கவுள்ளது.

இரண்டு அணிகளினதும் பெறுபேறுகளை ஒப்பிடுகையில் சீ ஹோக்ஸ் அணி சற்று பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது.

இந்த அணியில் ஓரே ஒரு வெளிநாட்டு வீரர் மாத்திரமே இடம்பெறுகிறார்.

ஆனால், ஏனைய வீரர்கள் தமது அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடக்கூடிய திறமை கொண்டவர்கள் என்பதால் சீ ஹோக்ஸ் அணி மற்றொரு வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புளூ ஸ்டார் அணியில் நான்கு வெளிநாட்டவர்கள் இடம்பெறுகின்றபோதிலும் கடந்த வாரம் நடைபெற்ற ரெட் ஸ்டார் அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் பிரகாசிக்கவில்லை. இதன் காரணமாக ரெட் ஸ்டார் 2 - 0 என வெற்றியீட்டியது.

அப் போட்டியில் புளூ ஸ்டார் அணியினர் சில கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டதும் அதன் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந் நிலையில் இன்றைய போட்டியில் எந்த அணி திறமையாக விளையாடுகினறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக்கில் முதல் சுற்றை வெற்றியுடன்...

2026-09-13 13:46:46
news-image

ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை?...

2026-09-13 13:20:59
news-image

பாகிஸ்தானுடனான 3ஆவது டெஸ்டில் 8 விக்கெட்களால்...

2026-09-13 01:42:52
news-image

கலம்போ எவ்சியிடம் இரண்டு கோல்கள் பின்னிலையில்...

2026-09-12 20:21:54
news-image

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட...

2026-09-12 03:07:12
news-image

ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில்  பங்குபற்றவுள்ள...

2026-09-12 01:48:15
news-image

நியூ யங்ஸை வெற்றிகொண்டு சுப்பர் லீக்கில்...

2026-09-11 21:08:42
news-image

இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்திப்பது இலங்கையா?...

2026-09-11 19:03:22
news-image

பங்களாதேஷை வீழ்த்தி மகளிர் ரி20 ஆசிய...

2026-09-11 15:57:35
news-image

நாவலப்பிட்டியில் மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி!

2026-09-11 14:22:48
news-image

சுப்பர் லீக் முதல் சுற்றை ஆறுதல்...

2026-09-10 20:41:01
news-image

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு பயிற்சிப்...

2026-09-10 19:35:15