நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு கிளையின் அனுசரணையுடன் நடத்தப்படும் 'ப்ரீமியர் லீக்' பகலிரவு கிரிக்கெட் சுற்றுப்போட்டி இம்மாதம் 29 ஆம் திகதி நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இப்போட்டித் தொடருக்கான உத்தியோகபூர்வ வெற்றிக்கிண்ண அறிமுகம், பங்கேற்கும் அணிகளை குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் நிகழ்வு மற்றும் போட்டியின் உத்தியோகபூர்வ விதிமுறைகள் அடங்கிய விபரங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீ சூரியா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தாய் சங்க நிர்வாகிகள் கொழும்பு கிளையின் நிர்வாகிகள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டித் தொடர் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்,
எமது பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 32 பழைய மாணவர் அணிகள் பங்கேற்கும் பிரமாண்டமான பகலிரவு கிரிக்கெட் தொடர் இதுவாகும். இப்போட்டித் தொடரானது 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, லீக் சுற்றமைப்பு முறையில் நடத்தப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடிக்கும் 16 அணிகள் அடுத்த கட்டத் தகுதிச்சுற்றுகளுக்குத் தெரிவு செய்யப்படும்.
இப்போட்டித் தொடரின் மூலமாகப் பெறப்படும் நிதியைக் கொண்டு பழைய மாணவர் சங்கத்தின் விளையாட்டு நிதியத்தை ஒரு மில்லியன் ரூபாயாக உயர்த்தவும், பாடசாலை மாணவர்களுக்குக் கடினப்பந்துப் பயிற்சிகளை வழங்கி மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் அவர்களை உயர்த்துவதற்கும் தீர்மானித்துள்ளோம்.
த்தொடரில் ஒரு அணியில் 8 வீரர்கள் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஒரு குழாமில் குறைந்தபட்சம் 10 வீரர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். பழைய மாணவர் அணியின் பிரிவு அடிப்படையில் மட்டுமே அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஒரு வீரர் ஒரு அணிக்கு மட்டுமே விளையாட முடியும் என்றும் நிர்ணயித்துள்ளோம்.
இப்போட்டிகள் டென்னிஸ் பந்தில் மட்டுமே நடத்தப்படும் என்பதுடன், சீரமைக்கப்பட்ட பந்துகளைப் பயன்படுத்தக் கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடுவர்களின் தீர்ப்புகளே இறுதியானது. தகுதிச்சுற்றுப் போட்டிகள் சமநிலையில் முடிந்தால் மேலதிக ஓவர் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
மழை மற்றும் வானிலை மாற்றங்களின் போது ஓவர்களைக் குறைக்கும் அதிகாரம் ஏற்பாட்டுக் குழுவுக்கு உண்டு. குழுச்சுற்றில் புள்ளிகள் சமநிலவடையும் போது நிகர ஓட்ட விகிதத்தின் அடிப்படையிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். ஏனைய அனைத்து பொதுவான விதிமுறைகளும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றியே அமையும்.
அத்துடன், இப்போட்டித் தொடருடன் இணைந்து இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 5 நாட்களுக்குப் பிரமாண்ட பொருட்காட்சியும், 29 ஆம் திகதி இரவு நேர இசைநிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM