இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அனத்து பீடங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து, மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டன.

மேலதிக தகவல்களுக்கு 

களனி பல்கலைக்கழகத்தில் மோதல் : அனைத்து பீடங்களும் மூடல்