ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பணை செய்த 3 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு

Published By: Digital Desk 3

10 Aug, 2026 | 09:53 AM
image

உத்தியோகபூர்வ விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக ஹெட்டிபொல பகுதியில் உள்ள 3 மோட்டார் சைக்கிள் விற்பனை முகவர்களுக்கு ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனைகளைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையிலும், போதிய கையிருப்பு இல்லாத சூழலையும் சாதகமாகப் பயன்படுத்தி சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு  கிடைத்தன.

போலிப் பெயர்களில் கொள்முதல்: தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நியாயமான முறையில் விநியோகிக்க அறிமுகப்படுத்தப்பட்ட காத்திருப்போர் பட்டியல் முறையை மீறி, சிலர் வெவ்வேறு பெயர்களில் மோட்டார் சைக்கிள்களை வாங்கி, பின்னர் அவற்றை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஹெட்டிபொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் பின்வரும் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்தது.

உத்தியோகபூர்வ விலை ரூ. 790,000 ஆக உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை ரூ. 850,000 க்கு விற்பனை செய்து, ரூ. 60,000 மேலதி தொகையைப் பெற்றுள்ளது.

கூடுதல் விலைக்கு விற்றமை மற்றும் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறியமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூ. 10,000 வீதம் ரூ. 20,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

ரூ. 790,000 பெறுமதியான மோட்டார் சைக்கிளை ரூ. 845,000 க்கு விற்றமை மற்றும் விலையைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக தலா ரூ. 10,000 வீதம் ரூ. 20,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள்களின் விலையைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக ரூ. 5,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள்களைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் அவற்றின் உத்தியோகபூர்வ விலைகளைச் கவனமாகச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அநியாயமாக அதிக விலை கோரும் அல்லது விலையைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் குறித்து 1977 என்ற அவசர உதவி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10