சட்டவிரோதமாக வல்லப்பட்டைகளை தாய்லாந்தின் பாங்கொக் நகரிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட குவைட் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து 154000 ரூபா பெறுமதியான 4 கிலோ 500 கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.