நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் கைகோர்க்க - மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு

Published By: Vishnu

09 Aug, 2026 | 08:19 PM
image

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பின்னால்; நாடு பூராகவும் உண்மையான மக்கள் அலை திரண்டு கொண்டிருக்கின்றனர். எனவே அவர் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம். மக்கள் அவருக்கு சரியான நேரத்தில் தீர்மானத்தை வழங்குவார்கள் எனவே அவர் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்த்து பயணிக்குமாறு  சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்  அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிலையத்தில் சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவி ஏற்றுக் கொண்ட ஜெஸ்மின் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் இருந்து இந்த நியமனத்தை பெற்றுக் கொண்டேன் இந்த தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் ஆசிர்வாதத்துடன் இந்த பொறுப்பை ஏற்றதில் மகிழ்ச்சியடைகின்றேன்

அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல இது மக்களுக்கான பொறுப்பாகவே நான் கருதுகின்றேன் அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமானது பல சமூக இன மதம் சார்ந்த ஒரு கட்டமைப்பைக் கொண்ட மக்கள் வாழும் மாவட்டம்.

நாமல் ராஜபக்ஷவின் அரசியல் பணி எந்தவித சமூகத்துக்கும் முரண்பாடு இல்லாமல் அனைத்து சமூகத்தையும் இணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டது அதனை கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம்.

அதனடிப்படையில் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பம்  ஊடாக பல தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க வுள்ளோம் அது மட்டுமல்லாது மீனவர்கள் விவசாயிகள் போன்ற மக்களின் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு இல்லாமல் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.

அதுமட்டுமல்ல கல்வி , அடிப்படை வசதி, உள்கட்டமைப்பு போன்ற பல அபிவிருத்தி விடயங்களை சரியாக கொண்டு செல்வதற்கு இலகுவான கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம்.

அதேவேளை எதிர்கால நாட்டின் வளர்சிக்காகவும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் மட்டக்களப்பு வளர்ச்சிக்காகவும் சூழலை உருவாக்க அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக தலைமைத்திற்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.

எனவே  கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்குரியவர்களிடம் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

அத்துடன் கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்தவும் கட்சியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு முன்னுதாரணமாக  இருக்கும் அதற்கான முழு ஆதரவு வழங்குவதோடு எங்களை விமர்சிப்பவர்களை மதிப்பளிப்போம்.

அரசியல் என்பது கருத்து வேறுபாடு இருக்கலாம் அந்த கருத்து வேறுபாடு எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காது இருக்க வேண்டும் என்பதுடன் வார்த்தைகள் மட்டும் அல்லாது செயல்கள் மூலமாக மக்களுக்கு  சேவை செய்யவே இந்த அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன்.

அதேவேளை மாவட்ட மக்களிடம் வேண்டிக் கொள்வது உங்கள் பிரச்சினைகள்,; ஆலோசனைகள், விமர்சனங்களை எங்களிடம் கூறுங்கள் அனைத்து கருத்திற்கும் மதிப்பளிப்பவனாக உங்களுடன் சேர்ந்து பயணிக்க தயாரகவுள்ளேன்.

வெறுமனவே கட்சியை மட்டுப்படுத்தி  வலுப்படுத்த வேண்டியதில்லை என்பதுடன் மாவட்டத்திலுள்ள இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிகாக ஈடுபடுவேன்.

இந்த பதவியை உணர்வுடனும் பொறுப்புடனும் மாவட்ட வளர்ச்சி மற்றும் அனைவரது வளர்சிக்காக செயற்படுவேன் என்பதுடன்  ஒரு புதிய அரசியல் கொள்கைக்காக வந்திருக்கின்றேன் எனவே மட்டுவாழ் மக்கள் அனைவரும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க என்னுடன் கை கோர்த்து பயணிக்கவும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது எனவே ஊடகங்களில் பேசுவதைவிட நீதிமன்றம் யார் குற்றவாளி என தீர்மானம் எடுக்கும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00
news-image

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு...

2026-09-10 15:20:22
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 820 கிலோ...

2026-09-10 15:21:21