(செ.கவிஷனா)
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களை பார்க்கும் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சிறைச்சாலைகளில் அதிகமான வாக்குகள் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் குறிப்பிட்டிருந்த விடயம் உண்மை என தோன்றுகிறது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி.செனரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்களுக்குப் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களும் மறைமுக அரசியல் சதிகளும் இருப்பதாக அரசாங்கம் தீவிரமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷஷவுக்குச் சிறைச்சாலைகளில் அதிகமான வாக்குகள் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் குறிப்பிட்டிருந்த சூழலில், ஜனநாயக முறையில் நாட்டின் ஆட்சியைப் பிடிக்க முடியாத சிலர் தங்களது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் சிறைச்சாலைகளைப் பயன்படுத்த முற்படுகிறார்கள் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
சிறைச்சாலைகளில் மோதல்கள் ஏற்படும் அடுத்த கணமே கைதிகளின் உறவினர்கள் அந்தச் சூழலில் வந்து ஒன்று கூடுவது பெரிய சந்தேகத்திற்குரிய விடயமாகப் பார்க்கப்படுவதால், இதன் பின்னணியில் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் உள்ளனவா என்பது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
ஏற்கனவே விவசாயிகளையும், வேலைவாய்ப்பற்றவர்களையும் தூண்டிவிட்டு அரசாங்கத்தை வீழ்த்த முயற்சித்த போதிலும், அத்தகைய செயற்பாடுகள் நிறைவேறாததனால் தற்போது சிறைச்சாலை மோதல்கள் மூலம் அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயற்சித்து பார்க்கிறார்கள்.
அதேவேளை, நாட்டின் 33 சிறைச்சாலைகளிலும் கொள்ளளவுக்கு மீறியளவில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அரசாங்கம், இந்த நெரிசலைக் குறைப்பதற்காகக் காலியிலுள்ள பழைய வைத்தியசாலை வளாகம் உள்ளிட்ட பல இடங்களைச் சிறைச்சாலைகளாக மாற்றும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும், சிறைச்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட, குற்றங்களைக் குறைத்துச் சட்டத்தை மதித்து நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இப்படியான அசாதாரண சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த, ஜனாதிபதியின் நேரடித் தலையீட்டின் கீழ் அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் ஒருங்கிணைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் அச்சமடையத் தேவையில்லை. நாட்டின் அபிவிருத்தி மற்றும் நலன்புரிச் சேவைகள் எவ்விதத் தடங்கலுமின்றி வழக்கம்போல் சீராக இடம்பெற்று வரும் என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM