சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார் ஏர்வேஸ் விமானங்கள் நேருக்கு நேர் மோதலை தவிர்த்து மயிரிழையில் தப்பின

Published By: Digital Desk 3

09 Aug, 2026 | 05:16 PM
image

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் ஒன்றோடொன்று மோதும் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன.

இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோல்ட் கோஸ்ட் நோக்கிப் புறப்படத் தயாராக ‘டாக்ஸிவேயில்’ சென்று கொண்டிருந்த ஜெட்ஸ்டார் எயார்பஸ் ஏ320 விமானத்திற்கு முன்னால், இழுவை வாகனம் மூலம் இழுத்துச் செல்லப்பட்ட கட்டார் ஏர்வேஸ் போயிங் 777 குறுக்கே வந்துள்ளது.

நிலமையை உணர்ந்த இரு விமானங்களின் கட்டுப்பாட்டாளர்களும் விமானங்களை உடனடியாகத் திடீரென நிறுத்தினர்.

ஜெட்ஸ்டார் விமானம் திடீரென பிரேக் அழுத்தப்பட்டதால், அதில் இருந்த விமானப் பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

பாதிப்புக்குள்ளான ஜெட்ஸ்டார் விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டு, பயணிகள் மாற்று விமானங்களுக்கு மாற்றப்பட்டனர்.

கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் முன் சக்கரப் பகுதிக்கும், அதனை இழுத்துச் சென்ற இழுவை வாகனத்திற்கும் இடையிலான இணைப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது.

விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டல்களின் படியே தங்கள் விமானி செயல்பட்டார் எனவும், மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததால் அவசரமாக பிரேக் பயன்படுத்தப்பட்டதாகவும் ஜெட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியக அதிகாரிகள் விமானப் பணியாளர்கள், இழுவை வாகன ஓட்டுநர்கள், விமானக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருவதுடன், சிரிரிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சிட்னி விமான நிலையத்தில் அண்மையில் ஏற்பட்ட விமானக் கட்டுப்பாட்டு மையப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி அன்று குவாண்டாஸ் விமானங்களுக்கு இடையே ஏற்பட்ட இதுபோன்ற மற்றொரு விபத்துத் தவிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20