(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் அண்மைகாலமாக சிறைச்சாலைகளில் இடம்பெறும் பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பிலான அனைத்து நிறுவன பிரதானிகளையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கிலேயே இக்கலந்துரையாடல் நடத்தப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்,சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இக்கலந்துரையாடலுக்காக சிறைச்சாலைகள் திணைக்கள பிரதானிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்,சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிடுகையில்,
நாட்டில் அண்மைகாலமாக சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கும் சம்பவங்களாகும். மனித உரிமைகள் ஆணைக்குழு என்ற ரீதியில் இது குறித்து நாங்கள் சிறப்பு கவனத்துடன் செயற்பட்டு வருகிறோம்.
ஏற்கனவே நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அவை கணிசமான தூரம் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மஹர சிறைச்சாலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஏனைய சம்பவங்கள் குறித்தும் தற்போது ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகின்றது.
தற்போது சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சிறைக்கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதுமட்டுமன்றி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் வராததால் பிணை கிடைக்காமல் பெருமளவிலானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நடைமுறையை சரியாகச் சீரமைத்து, நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளிலும் இனிவருங்காலங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய மறுசீரமைப்புகளுக்கு சட்ட சிக்கல்கள் தடையாக காணப்பட்டால், புதிய சட்டங்களை இயற்றியாவது இதனைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM