நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு நீதிமன்ற சுயாதீனத்துக்கு பாதிப்பில்லை: எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

09 Aug, 2026 | 04:37 PM
image

(செ.கவிஷனா)

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்தினால் நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவ்வாறான பாதிப்பு ஏற்படுவதை எதிர்த்தரப்பினர் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  

நாட்டில் நிலவிய ஊழல் கலாசாரத்தை முற்றிலும் ஒழித்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காகவே நாட்டு மக்கள் தமக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை நிறைவேற்றும் ஒரு கட்டமாகவே நீதித்துறையை வலுப்படுத்தும் பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல், அவற்றுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், போதைப்பொருள் பரிசோதனைகளுக்காக நவீன இயந்திரங்களையும் பணியாளர்களையும் நியமித்தல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாகவோ அல்லது செல்வாக்குமிக்க வர்த்தகராகவோ இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் சூழலே காணப்பட்டது. ஆனால் இன்று சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் வழக்கு விசாரணைகள் தாமதமின்றி விரைவுபடுத்தப்பட்டு, நீதியான முறையில் மக்களுக்குத் தீர்ப்புகள் கிடைக்கும்.

அரசியலமைப்புக்கு உட்பட்டு நீதிமன்றக் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உரியது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம் உயர் நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை வாரத்தில் 4 நாட்களும் மிக விரைவாக முன்னெடுத்துத் தீர்ப்புகளை வழங்க முடியும்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதிக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டில் எந்தவிதமான நியாயமும் இல்லை, எதிர்க்கட்சியினரின் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதால் ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாகவே அவர்கள் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10