இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

09 Aug, 2026 | 03:54 PM
image

மாகாண சபைத் தேர்­தலை விரைவில் நடத்த வேண்டும் என்று ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் விக்ரம் மிஸ்ரி கோரி­யி­ருக்­கின்றார்.

இலங்­கைக்கு கடந்த புதன்­கி­ழமை விஜயம் செய்­தி­ருந்த இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை அன்­றைய தினம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போதே மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை அவர் வலி­யு­றுத்­தி­ய­தாக இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரகம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

நாட்டில் கடந்த 9 வரு­டங்­க­ளுக்கு மேலாக மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் நடத்­தப்­ப­ட­வில்லை. ஜனா­தி­ப­தியின் நேரடி பிர­தி­நி­தி­யான மாகாண ஆளு­நர்­க­ளுக்குக் கீழேயே மாகாண சபை நிர்­வாகம் செயற்­பட்டு வரு­கின்­றது. மக்­களின் ஜன­நா­யக உரி­மையை மறுக்கும் வகையில் இத்­த­கைய செயற்­பாடு இடம்­பெற்று வரு­கின்­றது.

இத­னால்தான் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­மாறு தமிழ்த் தேசியக் கட்­சிகள் உட்­பட பல்­வேறு அர­சியல் கட்­சி­களும் கோரிக்கை விடுத்து வரு­கின்­றன. பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி உட்­பட சகல எதி­ர­ணி­யி­னரும் மாகாண சபைத் தேர்தல் உட­ன­டி­யாக நடத்­தப்­பட வேண்டும் என்ற விட­யத்தில் ஒரே கொள்­கை­யையே கொண்­டி­ருக்­கின்­றனர்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமோ மாகாண சபைத் தேர்­தலை நடத்தும் விட­யத்தில் இழுத்­த­டிப்புப் போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது. தாம் ஆட்­சிக்கு வந்து ஒரு வருட காலத்­துக்குள் மாகாண சபைத் தேர்­தலை நடத்­துவோம் என்று தேசிய மக்கள் சக்தி வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது. ஆனால், ஆட்­சி­பீடம் ஏறி இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலை­யிலும் அது குறித்து தேசிய மக்கள் சக்தி அக்­கறை காண்­பிப்­ப­தாக இல்லை.

மாகாண சபைத் தேர்­தலை எந்த முறை­மையில் நடத்­து­வது என்ற இழு­பறி நிலைமை நீடித்து வந்­தது. அதனை சாக்­கு­போக்­காகக் கூறி தேர்­தலை நடத்­து­வதை பிற்­போட்டு வந்த அர­சாங்கம், தற்­போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்­வ­தற்கு வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித்த ஹேரத் தலை­மையில் பாரா­ளு­மன்ற விசேட குழு­வொன்றை அமைத்­தி­ருக்­கின்­றது. அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மைக் கட்சித் தலை­வர்­க­ளான இரா. சாணக்­கியன், நிசாம் காரி­யப்பர், மனோ கணேசன் ஆகியோர் பழைய முறை­மையில் மாகாண சபைத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­மாறும் அதன் பின்னர் புதிய முறைமை தொடர்பில் ஆராய்ந்து தீர்­மானம் ஒன்­றுக்கு வர முடியும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

ஆனால், அந்தக் கோரிக்­கையை பாரா­ளு­மன்ற விசேட குழுவின் தலைவர் விஜித்த ஹேரத் ஏற்றுக் கொள்­ள­வில்லை. இந்தக் குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்­று­மாதம் நீடிக்­கப்­பட்டு அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு தற்­போது அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வது குறித்து ஆராய நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்தக் குழு­வா­னது தேர்­தலை இழுத்­த­டிப்­ப­தற்­கான ஒரு முயற்சி என்றே தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள் குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர்.

இந்த நிலை­யில்தான் தற்­போது இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த இந்­தியா வெளி­வி­வ­கார செய­லாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை சந்­தித்த போது மாகாண சபைத் தேர்­தலின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். இந்­தி­யாவின் இந்த செயற்­பாடு வர­வேற்­கத்­தக்­க­தாகும்.

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தைப் பொறுத்­த­ வ­ரையில் மாகாண சபை தேர்­தலை நடத்தும் விட­யத்­திலோ அல்­லது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாட்­டிலோ அக்­கறை காண்­பிப்­ப­தாக தெரி­ய­வில்லை.

இத­னால்தான் இலங்கை வந்­தி­ருந்த இந்­திய வெளி­யு­றவு செயலர் விக்ரம் மிஸ்­ரியை சந்­தித்த தமிழ்த் தேசியக் கட்­சி­களின் தலை­வர்கள், புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்­திலும் மாகாண சபைத் தேர்தல் விட­யத்­திலும் இந்­தியா, இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தனர்.

இதே­போன்­றுதான் தமிழ்ப்பேசும் கட்­சி­களின் தலை­வர்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இந்­திய உயர்ஸ்­தா­னிகர் சந்தோஷ் ஜாவை சந்­தித்து பேசி­யி­ருந்த போது மாகாண சபைத் தேர்­த­லுக்­கான அழுத்­தத்தை இந்­தியா கொடுக்க வேண்டும் என்றும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான அவ­ச­ரத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

இந்தச் சந்­திப்பின் போது இந்­திய உயர்ஸ்­தா­னிகர் சந்தோஷ் ஜா, ‘புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தெரி­வித்த விடயம் சிந்­த­னைக்­கு­ரி­ய­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் விவ­கா­ரத்தில் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும். ஓர் இலக்கை அடை­வ­தற்­கான பாதையில் அரை­வாசி தூரத்தை கடந்­ததன் பின்னர் அதனை புறந்­தள்ளி விட்டு மீண்டும் தொடக்கப் புள்­ளியில் இருந்து ஆரம்­பிப்­பது புத்­தி­சா­லித்­த­ன­மான நகர்வு அல்ல’ என்று தமிழ்ப்பேசும் கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் எடுத்துக் கூறி­யி­ருக்­கின்றார். உயர்ஸ்­தா­னி­க­ரது இந்தக் கருத்து பல்­வேறு செய்­தி­களை கூறு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற பெயரில், அர­சியல் தீர்வு தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள 13ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆபத்து வந்­து­வி­டுமோ என்று உயர்ஸ்­தா­னிகர் கரு­து­கின்­றாரோ என எண்ணத் தோன்­று­கின்­றது.

தேசிய மக்கள் சக்­தி­யா­னது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் உறுதி வழங்­கி­யி­ருக்­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதன் மூலம் அர­சியல் தீர்வு காணப்­படும் என்றும் அது­வ­ரையில் மாகாண சபை முறைமை அமுல்­ப­டுத்­தப்­படும் என்றும் தேசிய மக்கள் சக்தி தனது ஜனா­தி­பதி தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உறுதி வழங்­கி­யி­ருந்­தது.

நல்­லாட்சி அர­சாங்கக் காலத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்க முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யினை விட்ட இடத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்­பதன் மூலம் அர­சியல் தீர்வை துரி­த­மாக காண முடியும் என்றும் தேசிய மக்கள் சக்தி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

ஆனால், தற்­போது ஆட்­சிக்கு வந்து இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­க­வுள்ள நிலை­யிலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களும் அர­சாங்­கத்தால் எடுக்­கப்­ப­ட­வில்லை.

கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவை தமிழ்ப்பேசும் கட்­சி­களின் தலை­வர்கள் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். இதன்­போது மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்­டி­யதன் அவ­சியம் ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்தச் சந்­திப்பில் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் விட­யத்தில் தாமதம் ஏற்­பட்­டுள்­ளதை ஏற்றுக் கொண்ட ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் உறுதி வழங்­கி­யி­ருக்­கின்றார்.

மாகாண சபைத் தேர்­தலை நடத்தும் விட­யத்தில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க உறு­தி­யான நிலைப்­பாட்டை இந்தச் சந்­திப்பின் போது தெரி­விக்­க­வில்லை. இதி­லி­ருந்து மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வதில் அர­சாங்கம் அக்­க­றை­யற்றே இருக்­கின்­றது என்ற விடயம் தெளி­வா­கின்­றது.

மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தற்­போ­தைக்கு தயா­ராக இல்லை. அதே­போன்றே, புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாட்­டிலும் அர­சாங்கம் அக்­க­றை­கொள்­வ­தாக தெரி­ய­வில்லை.

இத்­த­கைய நிலையில் இந்த விவ­கா­ரங்­களில் இந்­தி­யாவின் அழுத்தம் என்­பது நிச்­ச­ய­மாக அவ­சி­ய­மா­ன­தாகும். தற்­போது மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் விக்ரம் மிஸ்ரி வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். அதே­போன்றே அர­சியல் தீர்வின் அவ­சி­யத்­தையும் இந்­தியா தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்த வேண்டும்.

ஏனெனில், இலங்­கை  இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவானது அன்றுதொட்டு தலையீடு செய்தே வந்திருக்கின்றது. இந்தியாவின் தலையீட்டினாலேயே இந்திய – இலங்கை ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு மாகாண சபை முறைமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.

மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டு 37 வருடங்கள் கடந்து விட்டபோதிலும் இன்னமும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை நீடித்து வருகின்றது. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழான இந்த மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் கூட இல்லாதொழிக்கும் செயற்பாடே இன்றும் தொடர்ந்து வருகின்றது.

எனவே, இனியாவது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி அதிகாரங்களை வழங்குவதற்கும் புதிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கும் இந்தியா போதிய அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ஐ.நா. மனித உரி­மைகள்...

2026-09-06 15:44:48
news-image

உண்மைகளை தொடர்ந்து மறைத்து வைக்கக் கூடாது

2026-08-30 14:09:47
news-image

கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

2026-08-23 12:19:51
news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43
news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13