நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும் பாதிப்பை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும் – சுனில் வட்டகல

Published By: Digital Desk 3

09 Aug, 2026 | 03:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதால் நீதித்துறைக்கு எவ்வாறான வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும், நீதிமன்ற கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு உரிய நடவடிக்;கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதன் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் மக்கள் நலன்சார்ந்த வகையில் உருவாக்கப்பட்டது. நீதித்துறை சுதந்திரம் பற்றி பேசும் ராஜபக்ஷர்கள் தமது அரசியல் இருப்பை பலப்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பின் 18 மற்றும்20 ஆம் திருத்தங்களை கொண்டு வந்தார்கள்.

அரசியலமைப்பின் 18 மற்றும் 20ஆம் திருத்தம் நீதித்துறையினதும், ஜனநாயகத்தினதும் அம்சங்களை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டன. நீதிபதிகளின் பதவிக் காலத்தை அதிகரிக்கும் தீர்மானத்துக் எதிராக இன்று குரல் கொடுக்கும் தரப்பினர் அன்று இவ்விரு திருத்தங்களுக்கும் ஆதரவாக வாக்களித்தார்கள்.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதால் நீதித்துறைக்கு எவ்வாறான வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதை எதிர்க்கட்சியினர் குறிப்பிட வேண்டும். அரசியல் நோக்கத்துக்காக நீதித்துறைக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08