மட்டு. மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு ; உடனடி விசாரணை கோரி கிழக்கு ஆளுநருக்கு  ஈ.பி.டி.பி. கட்சி அந்தனிசில் ராஜ்குமார் கடிதம் அனுப்பிவைப்பு

Published By: Digital Desk 3

09 Aug, 2026 | 03:18 PM
image

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக சுகாதார தொண்டர் 16 பேரின் ஆட்சேர்ப்பில்  முறைகேடு இடம்பெற்றிருக்கின்றது. எனவே இது தொடர்பாக துரிதமாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும். மக்கள் வாக்களித்து சபைக்கு அனுப்பியது  புட்டு, பூந்தியின் விலைகளை நிர்ணயிக்க அல்ல என்பதுடன்,  விதவை, ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாடாக இதனை கருதுகின்றோம் என ஈ.பி.டி.பி. கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் ஈ.பி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை(09) நடைபெற்றது.  இதில் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டு மாநகர சபை அமர்வு கடந்த 6ம் திகதி நடைபெற்றது. அதில் அதன் உறுப்பினர்கள் தங்களுக்கு தெரியாமல் 16 சுகாதார தொண்டர்களை  புதிதாக வேலைக்கு நியமித்ததாக குற்றச்சாட்டை  முன்வைத்தனர். இதனை ஊடகங்கள் ஊடாக அவதானிக்க முடிந்தது.

எனவே மாநகர சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் சுகாதார தொண்டர் என்ற அடிப்படையில் 16 பேரை நியமித்துள்ளனர். இதில் ஒரு மோசடி நடைபெற்றிருக்கின்றதா என்ற சந்தேகம்  எழுகின்றது. ஏன் என்றால் உயரிய சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டது உண்மையில் ஒரு முறைகேடான விடயமாக கருதுகின்றோம். எனவே இது சம்பந்தமாக துரிதமாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

மாமாங்கத்தை பிறப்பிடமாக கொண்ட ஒருவர் குறித்த வேலைக்கான நேர்முக பரீட்சைக்கு தொற்றியதாகவும் அவர் க.பொ.தர.சாதாரண தர பரீட்சையில் 5 பாடங்கள் சித்தியடைந்துள்ளார்  எனவும், அவருக்கு அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவே அவரை விட இந்த 16 பேரும் தகுதியுடையவர்களா? அல்லது அதிகார தலையீடு இருக்கின்றதா? என ஆளுநர் விசாரிக்க வேண்டும்.

அதேவேளை முறையற்ற விதத்தில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அதனை இரத்து செய்து மாநகரசபைக்கு சுகாதார தொண்டர் சேவைக்கான தேவையிருப்பின் அதனை பகிரங்கமாக பத்திரிகையில் வெளியீடு செய்து முறையான விதத்தில் அந்த நேர்முக பரிட்சை தேர்வு இடம்பெற வேண்டும்.

மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பலர் இருக்கின்றனர். அவர்கள் எந்த அரசாங்க வேலை வாய்ப்பு கொடுத்தாலும் பரவாயில்லை என இருக்கின்றனர். எனவே வெளிப்படையாக விண்ணப்பம் கோரியிருக்கலாம் என மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் முதல்வருக்கும் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

அதேவேளை, புட்டு எத்தனை, இஞ்சி நீளம் அகலம்,  பூந்தி ஒரு கிலோவுக்கு விற்க வேண்டும் என பார்க்கின்றதற்காக உங்களுக்கு மக்கள் வாக்களித்து அந்த அரியாசனத்தில் வைத்திருக்க அனுப்ப இல்லை மக்களின் அபிவிருத்தி, வீதி விளக்குகள் மற்றும் மழை வெள்ள நீர்  பிரச்சனைகள் போன்ற திட்டங்களை நிறைவேற்றி நகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்ககவே மக்கள் உங்களை அனுப்பியுள்ளனர்.

மாவட்டத்தில் வருடம் தோறும் நடைபெறுகின்ற கோயில்கள், உற்சவங்களில் யுத்தத்தில் கணவனை இழந்தவர்கள் உட்பட பல விதத்தில் கணவனை இழந்த விதவை ஏழைப் பெண்கள் இந்த உற்சவ காலம் 5 நாட்கள் வாழ்வாதாரத்துக்காக புட்டு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த  விதவைகளுடைய வாழ்வாதாரத்தை தமிழ் தேசியம் பேசுகின்றவர்கள் அழிக்கின்றனர். எனவே இந்த ஏழை மக்களின் வாழ்வாதாரமான புட்டு மற்றும் பூந்தி விற்பனை விலையை நிர்ணயிப்பது உங்கள் வேலை அல்ல மக்களின் வரிப்பணத்தில் இருந்து உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது மக்களுக்கு சேவையை செய்வதுதான் உங்கள் சேவையாக இருக்க வேண்டும்.

அதேவேளை உயரிய சபையில் என்ன கதைக்க வேண்டும் என தெரியாமல் புட்டு மற்றும் பூந்தி கதைகள் கதைத்து நேரத்தை வீணடித்து மக்களுடைய வரிப்பணத்தை வீணடிக்காமல் மக்களுடைய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

வருடந்தோறும் பருவப்பெயர்ச்சி மழை அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கும். அதன்போது பல தாழமுக்கம் மற்றும் புயல் வரும் இந்த நிலையில் மாநகர சபைக்குட்பட்ட எத்தனையோ வடிகான்களுக்குள் முற்காடுகளும் பத்தைகளும் நிறைந்து அடைபட்டுள்ளது. அதனை துப்புரவு செய்யாவிட்டால் பெரும் வெள்ள அனர்த்ததுக்குள்  மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் இவ்வாறு கல்லடி பாலம்,  பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதி சுற்று வட்டம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதி சுற்றுவட்ட பகுதிகளில் வீதி விளக்குகள்,  ஒளிர்வதில்லை இவ்வாறான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே அமர்வில் கதைப்பதில்லை. மக்கள் உங்களை அனுப்பியது உங்களுடைய சுய தேவைகளுக்காக அல்ல.

இன்று மாமாங்க ஆலய உற்சவத்தின் போது அங்கு வெளிமாவட்டங்களில் இருந்து சகோதர மொழி பேசுகிறார்கள் எத்தனை விதமான காணிவேல் உட்பட கண்காட்சி மையங்களை அமைத்து அவர்கள் நிர்ணயித்த விலையிலே அவர்களுடைய வியாபாரத்தை செய்து கொண்டு பல மில்லியன் ரூபாக்களை இங்கிருந்து எடுத்துச் செல்லுகின்றனர்.

ஆனால் மாவட்டத்தில் இருக்கின்ற விதவை பெண்கள் புட்டு வியாபாரத்தில் ஈடுபடும் போது அவர்களுக்கு நிர்ணய விலையை நிர்ணயித்து அவர்களை தடுக்கிறீர்கள். எனவே, எங்களுக்கு எந்த கட்சியுடனும் காழ்புனர்ச்சி இல்லை. ஆனால், மக்களின் நலன் சார்ந்து  எந்த விதமான பிரச்சனை இருந்தாலும் எந்த அச்சுறுத்தலுக்கும்   ஈ.பி.டி.பி கட்சி ஒரு போதும் அடிபணிவதும் இல்லை.

தொடர்ச்சியாக வடகிழக்கில் எமது கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய மக்களுடைய பிரச்சினைகளுக்கு எமது கட்சி  தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கும். எமது குரல் வலைகளை அச்சுறுத்தல் அதிகாரங்களினால் நசுக்க முடியாது இது விமர்சனம் அல்ல சுட்டிக்காட்டல். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08