(இராஜதுரை ஹஷான்)
சிறைச்சாலை மோதலுக்கு பின்னணியில் எதிர்க்கட்சிகளின் செயற்பாடு காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. நீதியமைச்சரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் சிறைச்சாலை மோதல்களுக்கு பிரதான காரணியாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து நீதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம்.
நீதியமைச்சருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கத்தை ஆராயாமலே ஆளும் தரப்பு அவரை பாதுகாத்தது, தனது பெரும்பான்மையால் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்தது.
கடந்த ஐந்து வார காலத்துக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்களில் 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 163 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அரசாங்கத்தின் நிர்வாகத்தின் தோல்வியே இந்த மோதலுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளது.
சிறைச்சாலை மோதலுக்கு பின்னணியில் எதிர்க்கட்சிகளின் செயற்பாடு காணப்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது அரசாங்கத்தின் நிர்வாக கட்டமைப்பின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. நீதியமைச்சரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் சிறைச்சாலை மோதல்களுக்கு பிரதான காரணியாகும்.
அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் உள்ளது. ஆகவே சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கலாம். அதனை விடுத்து எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டுவது பயனற்றது என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM