'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார, உணவுத் திருவிழா 15 ஆம் திகதி ஆரம்பம் - வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர்

09 Aug, 2026 | 02:47 PM
image

வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' (Visit Jaffna 2026 – Cultural and Culinary Festival) எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் , முற்றவெளி பண்ணை மைதானத்தில் எதிர்வரும் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், நடைபெறவுள்ள இந்தப் பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும் அமையவுள்ளது என  வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப் பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக் கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை, பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும், என தெரிவித்தார்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில் கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58