மத்திய நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாக அமையும் கடவத்தை முதல் மீரிகம வரையிலான 37 கிலோமீற்றர் வீதிப் பகுதியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றத்தைப் பார்வையிடுவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன வெள்ளிக்கிழமை (7) அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது 53% ஐத் தாண்டியுள்ள இவ்வீதித் திட்டத்தை வரும் 2028 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவு செய்ய முடியும் என திட்டப் பொறுப்புப் பொறியியலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், இவ்வருட இறுதிக்குள் 65% நிர்மாண முன்னேற்றத்தைப் பெறுவதற்கும், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அம்முன்னேற்றத்தை 95% வரை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த இத்திட்டத்தை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி விரைவுத் திட்டமாக நிறைவு செய்வதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டன.
கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையின், கொழும்பு வெளிவட்ட வீதி மற்றும் தெற்கு நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு நுழைவளிக்கும் கடவத்தை கட்டமைப்பு இடைமாற்றலின் நிர்மாணப்பணிகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் இதில் கலந்துகொண்டார்.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM