(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (08) பிற்பகல் நடைபெற்ற பேருவளை ரெட் ஸ்டார் கழகத்துக்கும் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகத்துக்கும் இடையிலான சுப்பர் லீக் நான்காம் கட்டப் போட்டி 3 - 3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இடைவேளையின்போது 2 - 1 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்த நியூ யங்ஸ் கழகம் இரண்டாவது பகுதியில் இழைத்த தவறுகளால் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொள்ள நேரிட்டது.
போட்டியின் 20ஆவது நிமிடத்தில் வலப்புறத்திலிருந்து பெற்றுக்கொண்ட பந்தை பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு நியூ யங்ஸ் வீரர் செமுவல் நிமோ கோலினுள் புகுத்தி அணியை முன்னிலையில் இட்டார்.

14 நிமிடங்கள் கழித்து இடது கோல் கம்பத்தில் பட்டு வந்த பந்தை ரெட் ஸ்டார் வீரர் அசண்டே ஜேரோம் கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.
ஆனால், சற்று நேரத்தில் டில்ஷான் பெர்னாண்டோ உயர்த்தி பரிமயாறிய பந்தை செமுவெல் நிமோ தனது தலையால் முட்டி கோல் போட்டு நியூ யங்ஸ் கழகத்தை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
இடைவேளைக்குப் பின்னர் 56ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் பின்களத்தில் ஏற்பட்ட தவறைப் பயன்படுத்தி ரெட் ஸ்டார் அணித் தலைவர் சமோத் டில்ஷான் கோல் நிலையை 2 - 2 என சமப்படுத்தினார்.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் சமோத் பரிமாறிய பந்தை பலமாக உதைத்து நியூ யங்ஸின் 3ஆவது கொலை மொஹமத் பர்ஹாத் போட்டார்.
ஆனால் 8 நிமிடங்கள் கழித்து மத்திய களத்தில் இருந்து பரிமாறப்பட்ட பந்தை நோக்கி ஓடிய நியூ யங்ஸ் வீரர் செமுவல் நிமோ பந்தை லாவகமாக நகர்த்திச் சென்று தனது மூன்றாவது கோலை போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ரெட் ஸ்டார் கழகம் வெற்றி கோலை போடுவதற்கு எடுத்துக்கொண்ட சில முயற்சிகள் வீண்போனதால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM