ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமெனி: உடல்நிலை வதந்திகளுக்கு மத்தியில் காணொளி வெளியீடு!

Published By: Digital Desk 3

09 Aug, 2026 | 11:45 AM
image

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவரான ஆயத்துல்லா மொஜ்தபா காமெனி ஆபத்தான நிலையில் உள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவர் தொடர்பான 12 விநாடிகள் கொண்ட புதிய காணொளி காட்சி ஒன்றை ஈரானின் அரசேசாரா 'மெஹ்ர்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள 12 விநாடிகள் கொண்ட குறுகிய காணொளியில், மொஜ்தபா காமெனி தனது ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆரோக்கியமான நிலையில் கலந்துரையாடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

எனினும், இந்த காணொளி எப்போது, எங்கு படமாக்கப்பட்டது என்ற விவரங்களை மெஹ்ர் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் இது பழைய வீடியோவாக இருக்கலாம் என எதிர்க்கட்சி அமைப்புகள் மற்றும் சர்வதேச அவதானிகள் சந்தேகிக்கின்றனர்.

மொஜ்தபா காமெனியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் (Channel 14) மற்றும் 'ஈரான் வயர்' செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே இவ்வீடியோ வெளியிடப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது தந்தை ஆயத்தொல்லா அலி காமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொஜ்தபா காமெனி புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  

பொறுப்பேற்ற நாள் முதல் அவர் எந்தவொரு நேரடி பொது நிகழ்வுகளிலோ அல்லது தொலைக்காட்சி உரையிலோ தோன்றவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மற்றும் பிரதிநிதிகள் மூலமாகவே அரசாங்கத்திற்கு வழிகாட்டல்களை வழங்கி வருகிறார்.  

அவரது உடல்நிலை சீர்குலைந்துள்ளதாக வெளியாகும் தகவல்களை ஈரானிய அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43