பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 29 பேர் சேவை அவசியம் கருதி வெவ்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில், பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் குறித்த இட மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.