தாய்லாந்து பாடசாலைத் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு!

Published By: Digital Desk 3

09 Aug, 2026 | 09:36 AM
image

தாய்லாந்தின் நோந்தாபுரி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 12 வயது சிறுமி சனிக்கிழமை (08) உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாக்குதலை நடத்தியவர் 14 வயதுடைய மாணவன் ஆவான்.

வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு வருவதற்கு முன்பாக, குறித்த மாணவன் தனது சொந்த தாத்தா மற்றும் பாட்டியைத் சுட்டுக் கொன்றுவிட்டுப் பாடசாலைக்கு வந்துள்ளான்.

பின்னர் பாடசாலையில் மேலும் 05 பேரைக் சுட்டுக் கொன்றதுடன், இறுதியில் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நோந்தாபுரி மாகாணத்தின் பிளாய் பாங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது மாணவியும் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.

இச்சம்பவம் தாய்லாந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43