தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கொழும்பின் சில பகுதிகளில் விசேட வீதிப் போக்குவரத்துத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரிமாதம் 4 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தேசிய சுதந்திர தின விழாவிற்கான பயிற்சிகளுக்காக காலி வீதியின் சில பாதைகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, 30, 31 ஆம் திகதிகளில் காலை 5.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை காலி முகத்திடல் சுற்றுவட்டம் முதல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.